சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
முதியவர் கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 70). இவர் கடந்த ஜூன் 4-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டைமாடனின் மகளும், முன்னாள் இலஞ்சி பேரூராட்சி தலைவியுமான மைதீன் பாத், அவரது கணவர் பரமசிவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறுகிய காலத்தில் விரைவாக, சிறப்பாக செயல்பட்ட குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மாதவன் உள்பட 11 பேர் கொண்ட போலீஸ் குழுவினரை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.