குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Update: 2023-02-14 13:37 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

குடற்புழு நீக்க மாத்திரைகள்

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு இன்று 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிக்கு உட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 546 குழந்தைகளுக்கும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 524 பெண்களுக்கும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள், சமூக நலத்துறை, பஞ்சாயத்துராஜ் அமைப்புகள், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்துத் துறைகளை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விடுபட்டவர்களுக்கு...

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படாமல் விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட உள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டேரி

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் துரை, நல கல்வி அலுவலர் எல்லப்பன், மருத்துவர் யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சம்பத் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியர் கலைவாணி, செவிலியர் கோமதி, அங்கன்வாடி பணியாளர் ரஞ்சினி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல குத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்