தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து தேவதுர்க்கை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கோவில் நிர்வாகி விஜயேந்திரன் சுவாமிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.