சித்தையன்கோட்டையில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் பஜனை வழிபாடு-மண்டல பூஜை

சித்தையன்கோட்டையில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் பஜனை வழிபாடு மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது.

Update: 2023-03-27 20:45 GMT

செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை மற்றும் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதையொட்டி சித்தையன்கோட்டை மாஹஸ்தான் கோவில் முருக பக்தர்கள் மற்றும் பழனி பாதையாத்திரை பஜனை சங்கம் சார்பில் திருமுருகன் கோவிலில் 60-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் பஜனை வழிபாடு நடைபெற்றது. இதற்கு பழனி பாதயாத்திரை பஜனை சங்க தலைவரும், குருசாமியுமான ஆர்.பி.ராமையா தலைமை தாங்கினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த பக்தர்கள் சித்தையன்கோட்டையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும்போது பாதயாத்திரை பஜனை சங்கம் சார்பில் பழனி வரை வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வருகிற 1-ந்தேதி பாதயாத்திரையை தொடங்கும் பக்தர்கள், 4-ந்தேதி பழனி சென்றடைந்து, 5-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நாள் அன்று, மலையேறி முருகனை வழிபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்