வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள பி.அழகாபுரி நகரத்தார் கலங்காத கண் கண்ட விநாயகர் கோவிலில் இருந்து சுமார் 50 மாட்டு வண்டிகளில் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்வது வழக்கம். இதைபோல் நேற்று பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கந்தர்வகோட்டைக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தங்களது நடை பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் பழமை மாறாமல் இருப்பதற்காக பழங்காலத்தில் மேற்கொண்ட இந்த மாட்டு வண்டி பயணத்தை தொன்று தொட்டு செய்து வருகின்றனர். ஒரு மாட்டு வண்டி பயணத்திற்கு ஏறக்குறைய ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது. ஆனாலும் தங்களின் பாதயாத்திரையை இடைவிடாது செய்து வருகிறோம் என்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு கந்தர்வகோட்டை பொதுமக்கள் சார்பாக இளநீர், தண்ணீர் லட்டு, காலை உணவு, மதிய உணவு கொடுத்தனர்.