அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-05-31 19:08 GMT


விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொங்கல் திருவிழா

விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த ஏப்ரல் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றைய தினம் முதல் தினசரி வெயிலுகந்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

அக்னிச்சட்டி

அக்னிச்சட்டி எடுக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே ஆண்களும், பெண்களும் அக்னி சட்டி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலிலிட்டு நகர்வலம் வந்து தங்கள் வேண்டுதலை செலுத்தினர்.

பக்தர்கள் பலர் அலகு குத்தி உறவினர்கள் அம்மனின் கோஷம் எழுப்ப நகர்வலம் வந்து அம்மனை தரிசித்தனர். 21 அக்னி சட்டி எடுத்து வந்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை செலுத்தினர். அம்மன் கோவில் திடலில் அம்மன்வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நகரில் முக்கிய வீதிகளில் பக்தி பரவசத்துடன் ஆண்களும், பெண்களும் கோவிலை ேநாக்கி சென்று ெகாண்டு இருந்தனர்.

அலகு குத்தி ரதம்

இதையடுத்து மாலையில் பக்தர்கள் அலகுகுத்தி ரதம் இழுத்து வந்தனர். இந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், குடிநீர் வசதியையும் செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்