பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்

பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

Update: 2023-08-01 18:54 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் வளவெட்டிக்குப்பம் செங்கால் ஏரிக்கரையில் ஆகாயக்கருப்புசாமி மற்றும் முப்பெரும் தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று ஆடி பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் செங்கால் ஏரிக்கரையில் இருந்து பால்குடம் எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்