ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-09-23 20:02 GMT

மூலஸ்தான சேவை

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம்.

இதனையொட்டி புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று கோவிலில் மூலவர் ரெங்கநாதர் சன்னதியில் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரையும் மூலஸ்தான சேவை நடைபெற்றது.

நீண்ட வரிசையில்...

காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ரெங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்