பக்தி பரவசத்துடன் தீச்சட்டி எடுத்த பக்தர்கள்

காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர்.

Update: 2023-04-12 10:57 GMT

சாணார்பட்டி அருகே உள்ள நொச்சியோடைபட்டியில் காளியம்மன், பகவதியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கிராம தேவதைகளுக்கு பழம் வைத்தல், அபிஷேகம் செய்தல், கரகம் ஜோடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதேபோல் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் நொச்சியோடைபட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடி அம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்