சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்

சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

Update: 2022-08-26 04:12 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்று ராமேசுவரம். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் தரிசனம் செய்ய ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், ஆவணி மாதத்தின் சர்வ அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவ்வாறு புனித நீராட குவிந்த பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

பின்னர், கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்