திண்டுக்கல்லில் பக்தர்கள் கிரிவலம்

திண்டுக்கல்லில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2023-08-01 19:45 GMT

திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் 200 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறவில்லை. எனினும் ஒவ்வொரு மாதமும் மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது பத்மகிரீஸ்வரர்-அபிராமிஅம்மனை மனமுருக வேண்டிக் கொண்டு பக்தி பாடல்களை பாடியபடி கிரிவலம் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்