பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்

புரட்சாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-23 19:30 GMT

கோவை

புரட்சாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இவ்வாறு வழிபட்டால் சனிபகவானால் ஏற்பட்டும் சிக்கல்கள் நீங்கும் என பக்தர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் அலை மோதும்.

இதன்படி புரட்டாசி சனிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். கோவை உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்பர் கோவில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு பால், தேன், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தீபம் ஏற்றினர்

தொடர்ந்து பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதற்கான கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கருட வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என கோஷம் எழுப்பி வழிபட்டனர். கோவில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பக்தர்கள் பலர் பெருமாளுக்கு துளசியை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். இதேபோல் கோவை ஒலம்பஸ் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் வரிசையாக காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்