பையூரில் பொன்னியம்மன் கோவில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசம்

ஆரணி அருகே பையூரில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்தது.

Update: 2022-08-10 11:29 GMT

ஆரணி

ஆரணி அருகே பையூரில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்தது

ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான பொன்னியம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறும். தேர் முழுவதும் சிதலம் அடைந்திருந்ததால் கடந்த பல ஆண்டுகாக தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் கிராம மக்கள், விழா குழுவினர்கள் இணைந்து புதிதாக ரூ.30 லட்சம் மதிப்பில் 25 அடி உயரமுள்ள பெரிய மரத்தேரை புதிதாக உருவாக்கினர்.இதனை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் கடந்தவாரம் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நேற்று காலை பகல் தேரோட்டம் நடந்தது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ். தரணிவேந்தன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், மோகன், மாமது, அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்களும், விழா குழுவினர்களும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். மாட வீதியின் வழியாக அசைந்தாடி ேதர் சென்றதை 18 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் பரவசத்துடன் கண்டுகளித்தனர். இதனையொட்டி பாதுகாப்பு உள்பட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்