திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-05 10:48 GMT

முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். முருகன் பெருமானுக்கு காவடி சுமந்துவரும் பக்தர்கள் முதலில் சரவண பொய்கை குளத்தில் நீராடி விட்டு மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.

சரவண பொய்கை குளத்தை பாதுகாக்க சுற்றி இரும்பு வேலிகள் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு அன்று கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் சரவண பொய்கையில் நீராட சென்றபோது பாசி படர்ந்து துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் குளிக்காமல் கவலையுடன் சென்றதாக தெரிகிறது. எனவே பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் சரவண பொய்கை குளத்தை சுத்தப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்