சக்திமலை முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து 108 பால் குடங்களை பக்தர்கள் எடுத்து ஊர்வலமாக சென்று சக்திமலை முருகன் கோவிலை சென்றடைந்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.