தேவிமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
அரக்கோணத்தில் தேவிமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரக்கோணம் ஜோதிநகர் காவலர் குடியிருப்பில் உள்ள தேவிமுத்துமாரியம்மன், சக்திமணிகண்டன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ், ஆறுமுகம்குருசாமி ஆகியோர் பங்கேற்று மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக கலச பூஜை, ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதில் அரக்கோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.