ரூ.53 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

ஆயக்குடி பேரூராட்சியில் ரூ.53 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

Update: 2022-06-27 15:05 GMT

கடையநல்லூர்:

ஆய்க்குடி, அகரகட்டு, கம்பிளி பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டிகள், பயணிகள் நிழற்குடை, கழிவுநீர் ஓடை, வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், போலீஸ் நிலையம் முன்பு ரூ.12 லட்சம் மதிப்பீட்டு பணிகள் நிறைவு கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகரமன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான், ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், பேரூராட்சி துணை தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்