சயனபுரம் ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
சயனபுரம் ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை நெமிலி ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
நெமிலி
சயனபுரம் ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை நெமிலி ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட சயனபுரம் ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றதலைவர் பவானி வடிவேலு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
முதலாவதாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை கட்டிடம் கட்டும்பணியும், அரசினர் மேல்நிலை பள்ளியில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான கழிவறை கட்டிடம் கட்டும்பணியும் தொடங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகன்யா இரவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜலட்சுமி மணி, பாலாஜி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.