போகலூர் யூனியனில் வளர்ச்சி திட்டப்பணிகள்

போகலூர் யூனியனில் வளர்ச்சி திட்டப்பணிகள்

Update: 2022-08-23 15:51 GMT

பரமக்குடி

பரமக்குடி தாலுகா போகலூர் யூனியனுக்கு உட்பட்ட எட்டிவயல் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பயனாளிகளிடம் வீடுகள் தரமான முறையில் கட்டப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். பின்பு போகலூர் ஊராட்சியில் உள்ள மயானம், சத்திரக்குடியில் உள்ள வாரச்சந்தை, அங்குள்ள கழிப்பறை வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்பு தீயனூர் கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய தார்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன், எட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் கனக சக்தி பாஸ்கரன், பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா, போகலூர் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளர் சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்