ரூ.23 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
திசையன்விளையில் ரூ.23 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளையில் 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.23 லட்சம் செலவில் பஸ் நிலைய வளாகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்டுதல், பஸ் நிலையத்தில் குடிநீர் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி முருகானந்தம் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி, வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபால், பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.