வளர்ச்சி திட்டப்பணிகள்

கொள்ளிடம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஆய்வு

Update: 2023-01-07 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, நெற்களம் அமைக்கும் பணி, பள்ளிகளில் கழிவறை கட்டிடம் கட்டும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து திருமுலைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதேபோல் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணியையும், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், பணி மேற்பார்வையாளர் அமலா ராணி, ஆரப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்