ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
குத்தாலம் பேரூராட்சியில் ரூ.1½ கோடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குத்தாலம் பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களின் அத்தியாவசிய திட்டமான ரூ.1 கோடி 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் எரிவாயு சுழலியின் கட்டிடப்பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளருமான குத்தாலம் க.அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாமாரியப்பன், பேரூர் செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான சம்சுதீன்,பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்,குத்தாலம் தாசில்தார் இந்துமதி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் சுந்தர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பிடம் மற்றும் பேரூராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.