69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்கி கெளரவித்தார் பிரதமர் மோடி...!

69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி கெளரவித்தார்.

Update: 2022-07-29 06:19 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா இன்று சென்னை சென்னை கிண்டியில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி கெளரவித்தார்.

அதன்பின்னர் 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் உரையை தொடங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. புதிய கல்வி கொள்கை சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது. மின்னனு பொருட்கள் தயாரிப்பில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா உள்ளது.

வலிமையான அரசு தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது. சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது.

தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். ரிஸ்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் கடும் முயற்சி எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மாணவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தியவர் அப்துல் கலாம்

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்