முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 80 முடிவுற்ற-புதிய திட்டப்பணிகள் விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 80 முடிவுற்ற-புதிய திட்டப்பணிகள் விவரம் தெரியவந்துள்ளது

Update: 2022-12-08 18:45 GMT

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ெதாடங்கி வைத்த 23 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற 57 திட்டப்பணிகள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

முடிவுற்ற திட்டப்பணிகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், 4 கோடியே 25 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் மருதம்புத்தூர், வேலாயுதபுரம், இலத்தூர், விஸ்வநாதபேரி, குத்துக்கல்வலசை ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், வலங்கைப்பலிசமுத்திரம், கரைகண்டார்குளம், களப்பாகுளம், அரியநாயகிபுரம், வீரிருப்பு, மைலப்பபுரம், ஐந்தான்கட்டளை, தேவிப்பட்டினம், கூடலூர், சங்கனாப்பேரி ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள், தென்காசி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள உணவுதானியக் கிடங்கு,

ஆலங்குளம் ஒன்றியம் ஓடைமறிச்சான் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி கோ-மருதப்பபுரம் மற்றும் குலசேகரமங்கலம் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடம், குருவிகுளம் ஒன்றியம் பழங்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடம், வாசுதேவநல்லூர் ஒன்றியம் நெற்கட்டும்செவல் ஊராட்சி பச்சேரியில் கட்டப்பட்டுள்ள 45 பசுமை வீடுகள், கடையநல்லூர் ஒன்றியம் நெடுவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முள்ளிகுளம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர், திருவெற்றியூரில் பயணிகள் நிழற்குடை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செங்கோட்டையில் 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்பரிசோதனைக்கூடம், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஊத்துமலை, வீரகேரளம்புதூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

துணை சுகாதார நிலையங்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வல்லத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பகுதி, கம்பனேரி மற்றும் மடத்துப்பட்டி பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு, பள்ளிக்கல்வி துறையின் சார்பில் செவல்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் மாணவ-மாணவிகளுக்கான கழிப்பறைகள்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தென்காசி நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா மற்றும் மங்கம்மாள் சாலை பகுதியில் சுகாதார நலமையம், சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் 3 கோடியே 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கசடு கழிவு மேலாண்மை மையம், கடையநல்லுார் நகராட்சியில் 1 கோடியே 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் குமந்தாபுரம் மற்றும் மேலக்கடையநல்லூர் பகுதிகளில் நகர்ப்புற நல மையம், அண்ணாமலை பொய்கை மேம்படுத்தும் பணி, திருமால் விழுங்கி ஊரணி மேம்படுத்தும் பணிகள், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு) சார்பில் அ.கரிசல்குளம், பழங்கோட்டை, வாசுதேவநல்லூர் ஆகிய கிராமங்களில் 63 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்புகள், தலைவன்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சித்த மருத்துவ பிரிவுகள், சங்கரன்கோவில் நடுவக்குறிச்சியில் 3 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி ஆகியவை திறக்கப்பட்டன.

மீன் விற்பனை அங்காடி

வனத்துறை சார்பில் புளியங்குடி தலையணை வனப்பகுதியில் வனத்தீ ஏற்படாமல் தடுக்க 3 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சியில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடி, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் மத்தளம்பாறை, ஐந்தாம்கட்டளை, நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 32 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மைய கட்டிடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தாட்கோ சார்பில் காரிசாத்தன், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் 2 கோடியே 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு ஆதிதிராவிடர் நல நவீன சமுதாயக்கூடங்கள் என மொத்தம் 22 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டன.

நியாயவிலை கடைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 1 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நெற்கட்டும்செவலில் ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, குத்தப்பாஞ்சான், மலையராமபுரம், செல்வவிநாயகபுரம், நாகல்குளம், இலத்தூர், சுமைதீர்த்தபுரம், காசிமேஜர்புரம், நெற்கட்டும்செவல், ஆண்டார்குளம் ஆகிய கிராமங்களில் நியாயவிலை கடைகள் கட்டும் பணி,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் 30 கோடியே 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மையம், தாய்சேய் நல கட்டிடம், சிறார் திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கடையநல்லூர் வட்டாரத்தில் குமந்தாபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புளியங்குடி நகராட்சி பகுதியில் 1 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் பாவூர்சத்திரத்தில் 72 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலுள்ள நாட்டின நாய்களுக்கான இனப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் என மொத்தம் 34 கோடியே 14 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்