நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த செடிகள் அழிப்பு

வாய்மேடு அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த செடிகள் அழிப்பு

Update: 2023-10-05 18:45 GMT

வாய்மேடு:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை வேதாரண்யம் உட்கோட்டம் சார்பில், நாகை மாவட்டம் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் வாய்மேடு அருகே சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்பட்டன. இதை தொடர்ந்து அவற்றை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலை ஓரங்களில் உள்ள செடி, கொடிகள், புதர்களை அழித்தனர். இந்த பணியில் சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு சாலையோரங்களில் உள்ள புதர்களை அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்