கந்தர்வகோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின் படி காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று, புகையிலை பொருட்களை கந்தர்வகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஷ், புதுநகர் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 300 கிலோ புகையிலை பொருட்களை தீயிட்டு அழித்தனர்.