6 வழிச்சாலை பணிக்காக நெற்பயிர்கள் அழிப்பு

ஓசூர் அருகே 6 வழிச்சாலை பணிக்காக நெற்பயிர்கள் அழிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-28 19:55 GMT

ஓசூர்

6 வழிச்சாலை

பெங்களூரு விமான நிலையம் முதல் ஓசூரை சுற்றி எஸ்.டி.ஆர்.ஆர், என்னும் சேட்டிலைட் ரிங்ரோடு 21 கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைய உள்ளது. சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்க திட்ட மதிப்பீடு முடிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தில் 6 வழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிரிட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.

பரபரப்பு

நேற்று முன்தினம் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை பணிகளுக்காக நெல்வயலை அழித்ததாக கூறப்படுகிறது. இது விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பயிர்களை அறுவடை செய்வதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். அப்படி இருந்தும் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்துள்ளது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்