மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் அழிப்பு- உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர் உள்பட அதிகாரிகள் அழித்தனர்

Update: 2023-04-27 00:51 GMT


மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று மாட்டுத்தாவணி பழமார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ஒவ்வொரு கடையாக சென்று பழங்களை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தனர். மொத்தம் 130 கடைகளில் இந்த சோதனை நடந்தது. அதில் சில கடைகளில் சேதாரமான பழங்களை விற்பனைக்கு வைத்து இருந்தனர். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே போல் சில கடைகளில் செயற்கை முறையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கண்டறியப்பட்டன. அந்த பழங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் சுமார் 154 கிலோ மாம்பழங்களும், 45 கிலோ திராட்சை பழம், 60 கிலோ தண்ணீர் பழம் மற்றும் 420 கிலோ வாழைப்பழங்கள் உள்பட சுமார் ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள பழங்கள் அழிக்கப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை கண்டறியப்பட்ட ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்