திண்டுக்கல்லில் மதுபானங்கள் தரையில் கொட்டி அழிப்பு
திண்டுக்கல்லில் மதுபானங்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டன.
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வோர், மதுபாட்டில்களை கடத்துவோர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, அந்த மதுபானங்களை கொட்டி போலீசார் அழிப்பது வழக்கம்
அதன்படி திண்டுக்கல் வடக்கு போலீசாரால், கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 300-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுபானங்களை விற்றவர்கள், கடத்தி வந்தவர்கள் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த வழக்குகள் தற்போது முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை, போலீஸ் நிலைய வளாகத்தில் கொட்டி போலீசார் நேற்று அழித்தனர்.