ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்கள் அழிப்பு

ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்கள் அழிக்கப்பட்டன.

Update: 2022-06-29 19:44 GMT


திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டியில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் சில கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரசாயன மருந்துகள், அவற்றை தெளிப்பதற்காக வைத்திருந்த ஸ்பிரேயரை பறிமுதல் செய்தனர். வாழைக்காய் வியாபாரிகள் இயற்கையான முறையில் வாழைத்தார்களை பழுக்க வைக்கவேண்டும். அதன் மீது ரசாயன கலவை தெளித்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் கலந்த வாழைக்காய்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்