400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
நல்லாண்பிள்ளைபெற்றால்,
சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றால் போலீசார் செஞ்சி அருகே போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போத்துவாய் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.