கல்வராயன்மலையில் 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி தலைமையிலான தனிப்படை போலீசார் கல்வராயன்மலை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சின்னதிருப்பதி, தெங்கியநத்தம் ஓடை அருகே சாராயம் காய்ச்சுவதற்காக 11 பேரல்களில் 2 ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது. மேலும் அதன் அருகே 25 லிட்டர் சாராயமும் வைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த போலீசார் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் அமைத்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.