15 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு
15 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
சிவகாசி,
நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்ட மாணவி பரிதாபமாக இறந்ததை தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவகாசியில் உள்ள 7 பிரபல ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து திடீர் சோதனை செய்தார். இதில் 15 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.