வேலை கிடைக்காத விரக்தியில்விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-27 18:45 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 23). இவர், என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வேலை தேடி சென்னைக்கு சென்றார். அங்கு வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் கடந்த 19-ந்தேதி, திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள மதுபான கடை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்