திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-09-26 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்று விழா கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

4-ந்தேதி தேரோட்டம்

விழாவில் தினசரி காலை, மாலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதி காலை 6 மணிக்கு தேர்த்திருவிழாவும், 5-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தில் ரத்னங்கி சேவையும், விஜயதசமி அம்பு போடுதல், கண்ணாடி பல்லக்கு வீதி உலா புறப்பாடு, 6-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்