கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலையில் கரியாலூர்- வெள்ளிமலை சாலையில் படகு குழாம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட 9 பெடல் படகுகளும் பழுதடைந்ததால் படகுகுழாமுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுககு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் படகு குழாம் வெறிச்சோடி காணப்படுவோடு அருகில் உள்ள சிறுவர் பூங்காவும் ஆள் நடமாட்டம் மின்றி காணப்படுகிறது. இதனால் கல்வராயன்மலைக்கு வரும் சற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே பழுதடைந்த படகுகளை பராமரிக்க வேண்டும் அல்லது புதிய படகுகள் வாங்கி விரைவில் படகு குழாமை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.