பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார்.
தமிழக முழுவதும் வெளி மாநில தொழிலாளர்களை சந்தித்து போலீஸ் அதிகாரிகள் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் சிமெண்டு ஆவையில் பணியாற்றும் வெளு மாநில தொழிலாளர்களிடையே போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்து பேசினார். மேலும் ஏதாவது பிரச்சினை இருந்தால் அது பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டார். அவர்களுக்கான வசதிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.