தீத்தடுப்பு செயல் விளக்கம்

தீத்தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2023-07-12 18:49 GMT

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 இடங்களில் நடத்துவதற்காக தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி, வெள்ள தடுப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் லாடபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில், நிலைய அலுவலர் (போக்குவரத்து), தீயணைப்பு வீரர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்புகளிலும், பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கத்தை தத்ரூபமாக செய்து காட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்