துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமனம்
கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசை நியமித்து தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசை நியமித்து தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் நெல்லையை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25-ந் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அங்கு வந்த கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40), அவரது உறவினரான மாரிமுத்து (32) ஆகியோரால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணை அதிகாரி நியமனம்
மணல் கடத்தல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு போலீசில் புகார் செய்து உள்ளார். இதன் காரணமாக அவரை, 2 பேரும் ேசர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் பிறப்பித்துள்ளார்.