குழந்தைகளுக்கு துணை போலீஸ் கமிஷனர் பரிசு

நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு துணை போலீஸ் கமிஷனர் பரிசு வழங்கினார்.

Update: 2022-07-03 18:50 GMT

நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில் மாநகர போலீசாரின் குடும்பத்தினர், குழந்தைகளுடன் அனைவரும் கூடும் விழா நடந்தது.

துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்