போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா ஆய்வு
பாளையங்கோட்டை பகுதியில் போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், பிரச்சினைக்கு உரிய இடங்கள், அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் ஆய்வு நடத்தி வருகிறார்.
நேற்று மாலையில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதிக்கு உட்பட்ட வி.எம்.சத்திரம் சோதனை சாவடி பகுதிகளில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா அங்குள்ள போலீசாரிடம் வாகன தணிக்கை குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அங்கு ஆவணங்களை சரிபார்த்தார். தொடர்ந்து வாகன தணிக்கையில் சந்தேகப்படும் படியாக வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார்.