பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கூட்டத்தை துணை தலைவர்- கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கூட்டத்தை துணை தலைவர்- கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மேகலாவெள்ளையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இந்த பேரூராட்சியில் தலைவர், துணை தலைவர் தவிர 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க.ைவ சேர்ந்த துணை தலைவர் மற்றும் 3 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறைந்த அளவிலான கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றதால் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.