20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அரியலூருக்கு அனுப்பி வைப்பு
பனப்பாக்கம் பள்ளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் அரியலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக்கோரி பெற்றோர்கள் நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்த 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பேருராட்சி பணியாளர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகளை லாரியின் மூலம் அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி லாரி மூலம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், லட்சுமி நரசிம்மன், தாசில்தார் ரவி மற்றும் செயல் அலுவலர் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.