கருட வாகனத்தில் நரசிம்மர் புறப்பாடு

திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட வாகனத்தில் நரசிம்மர் புறப்பாடு நடந்தது

Update: 2023-05-27 18:45 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருவாளியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இது 5(பஞ்ச) நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சனிக்கிழமை மாலை லட்சுமி நரசிம்மர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பட்டாச்சாரியார்கள் வேத கோஷங்கள் முழங்கிட தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்