கல்வித்துறை உத்தரவு எதிரொலி; பள்ளிக்கு முககவசம் அணிந்து வந்த மாணவர்கள்

கல்வித்துறை உத்தரவு எதிரொலியாக பள்ளிக்கு மாணவர்கள் முககவசம் அணிந்து வந்தனர்.

Update: 2022-07-01 19:06 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நெல்லை மாவட்டத்திலும் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையொட்டி பொது இடங்களில் நடமாடும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வகுப்பறையில் முககவசம் அணிந்தபடியே பாடம் கற்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு நேற்று முதல் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் அனைத்து மாணவ-மாணவிகளும் முககவசம் அணிந்தபடி இருந்தனர். ஆசிரிய-ஆசிரியைகளும் முககவசம் அணிந்து பாடம் நடத்தினார்கள். நெல்லை மீனாட்சிபுரம் அரசு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் மாணவிகள் அனைவரும் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்