வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆய்வு

பொம்மிகுப்பம் ஊராட்சியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-08 16:26 GMT

திருப்பத்தூர் வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜசேகர் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிதிட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொம்மிகுப்பம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வேளாண் துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளதா? ென்பதையும், மானிய விலையில் வழங்கப்பட்ட கேழ்வரகு விளைவிக்கப்பட்ட நிலங்களையும், தரிசி நில மேம்பாடு திட்டம் சார்பில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் 15 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளதையும், பண்ணை குட்டைகளையும் ஆய்வு செய்தார். சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், பண்ணை கருவிகள் கிடைத்துள்ளதா என விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்