தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி மறுப்பு: விழா கமிட்டியினர் போராட்டம்

விழா கமிட்டியினரும், பொதுமக்களும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.

Update: 2023-01-05 17:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி மாவட்ட  கலெக்டர், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாற்று தேதிகளில் நடத்தவும் விழா கமிட்டியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  விழா கமிட்டியினரும், பொதுமக்களும் அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்