தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை,
கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி
* அண்டை மாநிலமான கேரளாவில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இரு மாநில எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
* மேல் மற்றும் கீழ்நிலை நீர் தொட்டிகளை சுத்தமாக குளோரின் கலந்து பராமரிக்க வேண்டும்
* பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
* மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.