டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் செய்தனர். தொடர்ந்து டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தரகம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கியஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரன், வரவனை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி வரவனை, ஊர் முக்கியஸ்தர் ராமசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணிதிட்ட அலுவலர் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் கோவிந்தராஜ், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.