டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நன்செய் புகழூர் பகுதியை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தவிட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி தொடங்கி வைத்தார். நன்செய் புகழூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா பேரணியை தலைமை தாங்கினார்.
இதில், திட்ட அலுவலர் யுவராஜா, உதவி தலைமை ஆசிரியர் விஜயன், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் டெங்குவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.